Published : 06 Sep 2015 10:38 AM
Last Updated : 06 Sep 2015 10:38 AM

பெண் சமுதாயம் வளர்ந்தால் நாடு வளரும்: நீதிபதி எஸ்.தமிழ்வாணன் பெருமிதம்

பெண்களின் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றம், அதுதான் நாட்டின் முன்னேற்றம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் கூறினார்.

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பின் 6-ம் ஆண்டு விழா சென்னை ராயப் பேட்டை டெக்கான் பிளாசா ஹோட்டலில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்த குமாரி தலைமை தாங்கினார். செயலாளர் நிஷாபானு முன்னிலை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், எம்.எம்.சுந்தரேஷ், புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கிவைத் தனர்.

நீதிபதி எஸ்.தமிழ்வாணன் பேசும்போது, ‘‘ஆண்களும் பெண்களும் சமுதாயத்தின் 2 கண்கள். ஒரு ஆண் படித்தால், அவர் மட்டுமே படித்ததாக இருக்கும். பெண் படித்தால், அந்த குடும்பமே படித்ததாக பொருள். பெண்ணுக்கு பொறுப்புகள் அதிகம். பெண்கள் முன்னேறாமல் சமுதாயம் வளர்ச்சி அடையாது. பெண்களுக்கு சட்டம், இலக்கியம் முக்கியத்துவம் தருகிறது. சமுதாயமும் கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மகளிர் முன்னேற்றம் சமுதாய முன்னேற்றம், அதுதான் நாட்டின் முன்னேற்றம்’’ என்றார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, ‘‘நீதிபதிகள் தேர்வில் பெண்கள் அதிக அளவில் உள்ளனர். வழக்காடும் திறமை பெண் களுக்கு இயற்கையாகவே இருக்கிறது. கண் ணகியைவிட சிறந்த வழக்கறிஞர் கிடையாது. இலக்கியங்கள் பெண்களை சிறப்பித்துக் கூறுகின்றன’’ என்றார்.

நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பேசும்போது, ‘‘ஒரு ஆணின் முன்னேற்றத்துக்குப் பின்னால் மனைவி இருக்கிறார். ஆனால், பெண்ணின் முன்னேற்றத்துக்குப் பின்னால் பெரும்பாலும் கணவர் இருப்பதில்லை. இங்கு மகளிர் மேம்பாடு, ஆண் பெண் சமத்துவம் போன்றவை கேள்விக்குறியாகவே உள்ளன. ஆனாலும், பெண்கள் மனம்வைத்தால் முன் னேற முடியும்’’ என்றார். விழாவில் வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், வழக்கறி ஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் க.பாலு, லா அசோசியேஷன் தலைவர் டி.வி.கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x