அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் ஏதுமில்லை .

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும், இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு : ஏதுமில்லை” .

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in