நாளை நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

நாளை நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

நாளை (புதன்கிழமை) நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் முழுமையாக கலந்து கொள்வார்கள் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித் துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஆர்.பால சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய-மாநில அரசுகள் கடைப்பிடித்து வரும் தவறான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 2-ம் தேதி (நாளை) நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் தமிழக அரசின் பல்வேறு பணிகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறையில் 4-ம் நிலை பணியிடங்கள் அனைத்தும் அவுட்-சோர்சிங்கில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. வருவாய்த் துறையில் சான்றிதழ் வழங்கும் பணிகள் இ-சேவை மையத்திடம் விடப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கேந்திரமான காவல்துறையில் தொகுப்பூதிய நியமனம் நடைபெற்று வருகிறது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் துறைகளில் சுகாதாரப் பணிகள், அடி பம்பு ரிப்பேர் செய்யும் பணி, தெருவிளக்கு பராமரிப்புப் பணி ஆகியவை தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன.

கருவூலத் துறையை முழுவதும் விப்ரோ நிறுவனத் திடம் ஒப்படைப்பதற்கான பணி கள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

எனவே, மத்திய-மாநில அரசுகள் தாராளமய கொள்கைகளை கைவிட்டு, அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பி துறைகளை மேம்படுத்தவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யவும் வலியுறுத்தி செப்டம்பர் 2-ம் தேதி நடை பெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழக அரசின் அனைத்து துறை ஊழியர்களும் முழுமையாக பங்கேற்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in