மூத்த அமைச்சர்களின் கருத்துகளால் சர்ச்சை: கட்டுப்பாட்டுடன் பேச ஜெயக்குமார் அறிவுரை

மூத்த அமைச்சர்களின் கருத்துகளால் சர்ச்சை: கட்டுப்பாட்டுடன் பேச ஜெயக்குமார் அறிவுரை
Updated on
1 min read

முதல்வர் வேட்பாளர் குறித்த மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் கருத்துகளால் சர்ச்சை உருவாகிய நிலையில், கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மூத்தவர். கட்சி கட்டுப்பாடுகள் தெரியும். யாராக இருந்தாலும், ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூறியபடி முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது. உள்ளரங்க கூட்டத்தில் கருத்து பரிமாற்றம் இருக்கலாம். வெளியில் கருத்து சொல்வது ஆரோக்கியமானது அல்ல. எனவே, கட்சி நலன் கருதி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

முதல்வரும், துணை முதல்வரும் அவரது இல்லங்களில் கட்சிநிர்வாகிகளை அழைத்து பேசுவதில் எவ்வித தவறும் இல்லை. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் பங்கேற்காததற்கு பல காரணங்கள் இருக்கும். அரசியல் சாயம் பூசவேண்டாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in