கிடப்பில் போடப்பட்ட காரைக்குடி - மதுரை புதிய ரயில்வே தடம் திட்டம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. அதிருப்தி

கிடப்பில் போடப்பட்ட காரைக்குடி - மதுரை புதிய ரயில்வே தடம் திட்டம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. அதிருப்தி
Updated on
1 min read

காரைக்குடி - மதுரை புதிய ரயில்வே வழித்தடம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் கார்த்தி சிதம்பரம் எம்பி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர், மேலூர், வழியாக மதுரைக்கு 88 கி.மீ.,-க்கு புதிய வழித்தடம் அமைக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்தது.

கடந்த 2013-ம் ஆண்டு காரைக்குடியில் இருந்து குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் போன்ற ஆன்மிகதலங்களை இணைத்து மதுரை செல்லும் வகையில் ஆய்வு பணியும் நடந்தது.

மேலும் இப்பகுதிகளில் அதிகளவில் கட்டிடங்கள் இல்லாததால் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இல்லை என ஆய்வு அறிக்கையை ரயில்வே அதிகாரிகள் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து பல ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்து கார்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில்வே வழித்தடம் அமைக்க ஆய்வுப் பணி மட்டும் நடந்தது.

அதன்பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இத்திட்டம் குறித்து கடந்த ஆண்டே தங்களிடம் வலியுறுத்தினேன்.

இத்திட்டத்தை செயல்படுத்தினால் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் இருந்து கல்வி, மருத்துவத்திற்காக மதுரை செல்லும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in