தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்

தங்க தமிழ்ச்செல்வன் - கம்பம் என்.ராமகிருஷ்ணன்: கோப்புப்படம்
தங்க தமிழ்ச்செல்வன் - கம்பம் என்.ராமகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தேனி மாவட்ட திமுக, தேனி வடக்கு - தேனி தெற்கு என, இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தேனி தெற்கு திமுக பொறுப்பாளராக கம்பம் என்.ராமகிருஷ்ணனும், தேனி வடக்கு திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (அக். 1) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"தேனி மாவட்டத்தை கட்சி நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

தேனி தெற்கு மாவட்டம்

கம்பம்

ஆண்டிப்பட்டி

தேனி வடக்கு மாவட்டம்

போடிநாயக்கனூர்

பெரியகுளம் (தனி)

இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.

மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்

மேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேனி தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர் - கம்பம் என்.ராமகிருஷ்ணன்

தேனி வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - தங்க தமிழ்ச்செல்வன்"

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in