

கிண்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால், சென்னைக்கு வந்த மலைக்கோட்டை, கம்பன், பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஒன்று முதல் 2.30 மணி நேரம் வரை தாமதமாக வந்தடைந்தன. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட் டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பெரும்பாலான ரயில்கள் அதிகாலையில்தான் எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்நிலையில், நேற்று அதிகாலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூர் நோக்கி வரும் பாதையில் கிண்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந் தது. இதையடுத்து, விரைவு ரயில் கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்துக்கு சென்ற தொழில்நுட்ப அலுவலர்கள் சீரமைப்புப் பணிகளை மேற் கொண்டனர். இதற்கிடையே, விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. இதனால், மலைக்கோட்டை, கம்பன், பொதிகை ஆகிய 3 விரைவு ரயில்கள் 2.30 மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தன. சேது, அனந்த புரி, கன்னியாகுமரி விரைவு ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன. பாண்டியன், சிலம்பு, முத்து நகர் விரைவு ரயில்கள் 45 நிமிடங்கள் தாமதமாக வந்தடைந்தன.
இதேபோல், சென்னை எழும் பூரிலிருந்து புறப்பட வேண்டிய பாண்டிச்சேரி பயணிகள் ரயில், குருவாயூர் விரைவு ரயில் ஆகியவை 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மணிக்கணக்கில் ஒரே இடத்தில் ரயில்கள் நின்றதால், பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
அறுந்துபோன மின்கம்பியை சரிசெய்யும் பணி காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால், காலை 9.40 மணிக்கு பிறகே ரயில் சேவை சீரானது.