கிருஷ்ணகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை: மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி அணைக்கு பின்புறம் உள்ள பகுதியில் விளைநிலங்களில் தேங்கி யுள்ள மழை நீர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி அணைக்கு பின்புறம் உள்ள பகுதியில் விளைநிலங்களில் தேங்கி யுள்ள மழை நீர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி நகரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் போது, நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது. பாரூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி, ஊத்தங்கரை, பெனுகொண்டாபுரம், போச்சம் பள்ளி, சூளகிரி, நெடுங்கல் பகுதிகளில் கனமழை பெய்தது.

கிருஷ்ணகிரி நகரில் இரவு 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய விடிய, விடிய பெய்தது. மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் வழிந்தோடியது.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தற்காலிக சந்தை செயல்படும் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அவதியுற்றனர். மழையின் போது கூட்டுறவு காலனி, சென்னை சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு பிறகே ஒரு சில பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர்.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 71.40 மி.மீ மழை பதிவாகியிருந்தது.

நெடுங்கல் 60.40, போச்சம்பள்ளி 56.20, பாரூர் 55, தேன்கனிக்கோட்டை 15, ஓசூர் 27, அஞ்செட்டி 9.40, ஊத்தங்கரை 30, பெனுகொண்டாபுரம் 34.20, சூளகிரி 49, ராயக்கோட்டை 13 மி.மீ பதிவானது. நேற்று பகலில் சாரல் மழை பெய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in