வெளியூர்களில் இருந்து வருபவர்களை பேருந்து நிலையங்களில் பரிசோதிக்க முடிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை மாநகரில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், வெளியூர்களில் இருந்து வருபவர்களை பேருந்து நிலையங்களில் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘மாநகரில் தினமும் சராசரியாக 4,500 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிங்காநல்லூர், காந்திபுரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் வந்து செல்லும் காய்கறி மார்க்கெட்டுகளில் ‘ஸ்கிரீனிங்’ செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து, சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என கேட்டறிந்து பெயர், விவரங்களுடன் பதிவு செய்யப்படும். அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். இப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் போன்ற கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதை பின்பற்றாவிட்டால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்தும் முக்கிய இடங்களில் விளம்பரப்பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in