

நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை மின்வசதி பெறாத சிறு வாட்டுக்காடு மலைக் கிராமம், கடும் முயற்சிக்கு பிறகு மின்வசதி பெற உள்ளதாக ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி தெரி வித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் அருகேயுள்ள வடகாடு ஊராட்சியில் சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை, இந்த மலைக் கிராமங்களுக்கு மின்சார வசதி இல்லை. இந் நிலையில் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்த தன் பலனாக இம்மலைக் கிராமத் துக்கு மின்சாரம் வழங்க மாநில மின்சார சமச்சீர் நிதியில் இருந்து ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நேற்று அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். முன்னதாக இந்த மலைக் கிராமத்துக்கு சூரிய சக்தி தெருவிளக்குகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இந்த மலைக் கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டும் பணியும் நடக்கிறது. இதனையும் ஆய்வுசெய்து மலை வாழ் மக்களின் குறைகளை கேட்ட றிந்தார்.
அர. சக்கரபாணி எம்.எல்.ஏ. கூறுகையில், சிறுவாட்டுக்காடு மலைக்கிராமத்துக்கு முதன் முறையாக மின்சார இணைப்பு ஏற்படுத்த நடைபெறும் பணிகள் நிறைவுபெற உள்ளது.
இதையடுத்து சில தினங் களில் இக்கிராம மக்களுக்கு மின் வசதி கிடைக்க உள்ளது என்றார். ஆய்வின்போது மாவட்ட கவுன் சிலர் சங்கீதா, ஊராட்சித் தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.