

உயிருடன் இருப்பவர் இறந்ததாக வேறு உடல் ஒப்படைத்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந் தவர் கொளஞ்சியப்பன் (55). சுய நினைவின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த இரு தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். உடல் சற்றுமுன்னேற்றமடைந்த நிலையில், மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டார். கரோனா தொற்று இருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம்திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாலர்(52) என்பவர் சுய நினைவிழந்த நிலையில் இம்மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொளஞ்சியப்பனை படுக்க வைத்த அதே படுக்கையில் அவரை அனு மதித்தனர். புதிதாக ஒரு நபர் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், ஏற்கெனவே அந்தப் படுக்கையில் இருந்த கொளஞ்சியப்பனின் நோயாளி விவரக் குறிப்பு(கேஸ்ஷீட்) மாற்றப்படாமல் இருந்துள்ளது. இந்நிலை யில் நள்ளிரவு பாலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொளஞ்சியப்பன் உயிரிழந்ததாக கருதி, அவரதுஉறவினர்களிடம் பாலரின் உடலை ஒப்படைத்து விட்டனர். இறுதிச் சடங்கின் போது கடைசி நேரத்தில் முகத்தை பார்த்ததால், பாலரின் உறவினர்களிடம் உடல்ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இன்னும் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.