கிசான் முறைகேடு: விருதுநகரில் 2,950 நபர்களிடம் ரூ.60 லட்சம் வசூல்- ஆட்சியர் பேட்டி

கிசான் முறைகேடு: விருதுநகரில் 2,950 நபர்களிடம் ரூ.60 லட்சம் வசூல்- ஆட்சியர் பேட்டி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட 3,884 நபர்களில் 2,950 பேரிடம் ரூ.60 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில், "பிரதமரின் கிசான் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்டிருந்த 2,149 நபர்களும், வெளி மாவட்ட நபர்கள் 1,735 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 2,950 பேரிடம் ரூ.60 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 934 நபர்களிடம் ரூ.11.58 லட்சம் இந்த வாரத்திற்குள் வசூல் செய்யப்படும்.

முறைகேட்டில் ஈடுபட்ட பலர் நில உரிமையாளர்களாக இல்லாமல் குத்தகைதாரர்களாக உள்ளனர். அதனால் குற்ற நடவடிக்கையோ கைது நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in