தமிழகத்தில் எங்கும் ரேஷன் பொருள் வாங்கிக் கொள்ளும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ இன்று அமல்: திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் எங்கும் ரேஷன் பொருள் வாங்கிக் கொள்ளும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ இன்று அமல்: திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
Updated on
1 min read

மத்திய அரசின் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, இதற்கான பணிகளை தொடங்கியது. குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், விரல் ரேகை பதிவு மூலம் பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதலில் கடந்த ஆண்டு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்ட அளவில் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழகம்முழுவதும் எங்கு வேண்டுமானாலும் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் இன்று முதல் அமலாகிறது. இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில், 5 சதவீதம் பொருட்கள் கடைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்படும்’’ என்றார்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், குடும்ப அட்டை உறுப்பினர் மட்டுமே இனி பொருட்கள் வாங்க முடியும். ஆனால், மலைப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் ‘4 ஜி’ நெட் ஒர்க் அடிப்படையில், விற்பனை முனைய இயந்திரம் செயல்படுவதில் சிக்கல் உள்ளதாகவும், வயதானவர்கள் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in