தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை பணி: 6 மாதங்களில் முடிக்கப்படும்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை பணி: 6 மாதங்களில் முடிக்கப்படும்
Updated on
1 min read

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ தொலைவுக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடி. முதல் கட்டமாக கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோயில் இடையே 11 கி.மீதொலைவுக்கு பணிகள் நிறைவு பெற்று, ரயில்கள் இயக்கி சோதனைநடத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு - சிங்கபெருமாள் கோயில், சிங்கபெருமாள் கோயில் - கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி - தாம்பரம் என 3 பிரிவுகளாக பணிகள் நடக்கின்றன.

முதல்கட்டமாக கூடுவாஞ்சேரியில் இருந்து சிங்கபெருமாள் கோயில் இடையே 11 கி.மீ தொலைவுக்கு பணிகள் முடிவடைந்து, சோதனை முறையில் ரயில்கள்இயக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள பணிகள் அடுத்த 6 மாதங்களில் நிறைவு பெறும்.

அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில்களின் சேவை படிப்படியாக பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இதன்மூலம் தென்மாவட்ட விரைவு ரயில்களில் தாமதம் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும், செங்கல்பட்டுக்கு கூடுதலாக மின்சார ரயில்கள்இயக்கவும் முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in