Published : 01 Oct 2020 07:30 AM
Last Updated : 01 Oct 2020 07:30 AM

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஒரே பரிசோதனையில் இதய நோய்களை கண்டறியும் நவீன கருவி அறிமுகம்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறியும் அதிநவீன சி.டி.ஸ்கேனர் கருவியின் செயல்பாட்டை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் உடன் உள்ளனர். படம்:ம.பிரபு

சென்னை

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறியும் அதிநவீனசி.டி.ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறிய அதிநவீன ‘அக்விலியன் ஒன் பிரிசம் 640 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர்’ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிநவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறும்போது, “இந்த அதிநவீன கருவி, ஜப்பானில் தயார் செய்யப்பட்டது. புற்று நோய், இதய நோயால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். நோயாளிகள் குறைந்த நேரத்தில் பரிசோதனை முடிவுகளை அறிந்துகொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, “மருத்துவ தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறையான 640 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர் என்ற அதிநவீன கருவியை அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ளஅனைவருக்கும் பயனளிக்கும். மருத்துவத்தில் 60 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 3 ஆண்டுகளில் தமிழகம்பெற்றுள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.பயமோ, பதற்றமோ அடைய வேண்டாம். அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x