Published : 08 Sep 2015 08:37 AM
Last Updated : 08 Sep 2015 08:37 AM

மதுக்கடை பாரில் தகராறு: திண்டுக்கல் வழக்கறிஞர் படுகொலை - முன்விரோதத்தால் நிகழ்ந்த கொடூரமா?

திண்டுக்கல் அருகே முன்வி ரோதத்தில் மதுக்கடை பாரில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜமால் முகமது(32). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜமால் முகமது, அவரது நண்பர்களுடன் சித்தையன் கோட்டை பஸ் நிலைய மதுக்கடை பாருக்கு சென்றுள்ளார். சித்தையன்கோட்டையை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார், குமாரவேலு ஆகியோரும் இந்த பாருக்கு மது அருந்த வந்துள்ளனர். அப்போது, போதையில் ஜமால் முகமது தரப்பினருக்கும், செல்வகுமார் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த செல்வகுமார், குமாரவேலு மற்றும் பார் ஊழியர் முத்தையா ஆகியோர் ஜமால் முகமதுவை அரிவாளால் வெட்டி, கம்பியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் ஜமால் முகமது மயங்கி விழுந்தவுடன் அவரைத் தாக்கிய வர்கள் உடனே தப்பிவிட்டனர்.

தகவலறிந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் ஜமால் முகமதுவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை ஜமால் முகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜமால் முகமது போடிகாமன் வாடி பஞ்சாயத்துத் தேர்தலில் துணைத் தலைவர் சதீஷ் குமாருக்கு ஆதரவாக வேலை பார்த்துள்ளார். இவர்களுக்கு எதிராக செல்வகுமார், குமாரவேலு வேலை பார்த்துள்ளனர்.

அதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பாரில் ஊழியர் முத்தையாவுக்கும், ஜமால் முகமதுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. முத்தையாவுக்கு ஆதரவாக செல்வகுமார், குமாரவேலு ஆகியோர் ஜமால்முகமதுவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் ஜமால் முகமது கொலை செய்யப்பட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x