அதிகரிக்கும் பஸ் படிக்கட்டு மரணங்கள்: ஒரே நாளில் இரு பள்ளி மாணவர்கள் பலி

அதிகரிக்கும் பஸ் படிக்கட்டு மரணங்கள்: ஒரே நாளில் இரு பள்ளி மாணவர்கள் பலி
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் பஸ் படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் தவறி விழுந்து பலியாகும் சம்பவம் அதிகரித் துள்ளது. நேற்று முன்தினம் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள விலாங்காடுபாக்கம் சிங்கிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சதாம் உசேன் (14). வடகரையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல பள்ளிக்கு பஸ்ஸில் சென்றார். திருவொற்றியூரில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற 56-கே மாநகர பஸ்ஸில் சென்றபோது அவர், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்ட சதாம் உசேன் அதே இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, மாதவரம் போக்கு வரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே திருவள்ளூர் அருகே உள்ள தாமரைப் பாக்கம், பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் ஞானமூர்த்தி மகன் ஜனா(13). கசுவா கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 11-ம் தேதி காலை பள்ளி செல்ல தாமரைப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் ஆவடி நோக்கிச் சென்ற மாநகர பஸ்ஸில் ஏறினார். கூட்ட நெரிசலாக இருந்ததால் படிக் கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார்.

அப்போது, பஸ்ஸை ஒட்டி, காய்கறி மூட்டைகளுடன் சென்ற இரு சக்கர வாகனத்தில் ஜனா வின் கால்கள் மோதியது. இதனால் தவறி விழுந்து படுகாயமடைந் தார். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜனா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, வெங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் வேதனை

பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை பெரிய சாகசமாக கருதுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி விக்கின்றனர். மேலும் அவர்கள் கூறும்போது, ‘நடத்துநர் கூறினாலும் பலர் படிக்கட்டை விட்டு நகருவதில்லை. கூட்ட நெரிசலுக்கு ஏற்றபடி அதிக எண் ணிக்கையிலான பஸ் களை இயக்குவதுடன் படிக்கட்டு பய ணத்தை தவிர்க்க போலீஸாரைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். கதவு வைத்த பஸ்களை நெரிசல் நேரங்களில் இயக்க வேண்டும்.

ஆபத்தான பயணத்தை தவிர்க்குமாறு பள்ளிகளிலும் பெற் றோர் தரப்பிலும் அறிவுறுத்த வேண் டும்’ என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in