ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேரவை தலைவர் செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேரவை தலைவர் செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சட்டப்பேரவை தலைவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல் படுவதாக திமுக சட்டமன்ற குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தபின் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான நீதிபதி ரகுபதி கமிஷன் அளித்துள்ள அறிக்கை குறித்து விவாதம் நடத்த அனுமதி கேட்டோம். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை தமிழக அரசைக் காப்பாற்றும் வகையில் உள்ளது. இந்த அறிக்கையில் 30, 31, 32, 40, 41 ஆகிய பக்கங்

களில் இணைப்பு என்று குறிப் பிடப்பட்டுள்ளது. ஆனால் அது பற்றி எந்த விளக்கமும் இல்லை. இணைப்பு பக்கங்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம். இது குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெறு கிறது. இதுபற்றி விவாதிக்கவும் பேரவைத் தலைவர் அனுமதிக்க வில்லை. குடிநீர் தட்டுப்பாடு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத் தின் மீது திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசினார். அவர் பல்வேறு குறைகளை சுட்டிக் காட்டினார். அவை அனைத்தையும் பேரவை தலைவர் அவை குறிப்பில் இருந்து நீக்கி விட்டார். நேற்று (செப்டம்பர் 1) சுற்றுச்சூழல் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதி லளித்த அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், திமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாக செயல்பட்டது என்றார். அதை அவை குறிப்பில் இருந்த நீக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ஆனால், இன்று (செப்டம்பர் 2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப் பினர் கே. பாலபாரதி பேசும்போது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பாக கூறியதை பேரவை தலைவர் அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். அவர் தொடர்ந்து ஒருதலைபட்சமாக நடந்து வருகிறார். ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார். இதனைக் கண்டித்து வெளி நடப்பு செய்தோம். நாங்கள் அடையாளமாக வெளிநடப்பு செய்த பிறகு மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கெடுத்து வருகிறோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in