தொழிலாளர்கள், பயணிகள் பாதுகாப்புடன் நூறு சதவீத பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள், பயணிகள் பாதுகாப்புடன் நூறு சதவீத பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தொழிலாளர்கள், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி நூறு சதவீத பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மதுரையில் அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தின.

இதில் சம்பள உடன்படிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வு பாக்கி வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு சொந்த விடுப்பை கழிக்காமல் சம்பளம் வழங்க வேண்டும், 1.4.2019 முதல் ஓய்வு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் பணப்பலன்கள் வழங்க வேண்டும், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், நூறு சதவீத பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச பொதுச் செயலாளர் மேலூர் வி. அல்போன்ஸ் தலைமை வகித்தார்.

சிஐடியூ பொதுச்செயலாளர் கனகசுந்ததர், ஏஐடியூசி பொதுச்செயலாளர் நந்தாசிங், எச்.எம்.எஸ். பொதுச்செயலாளர் ஜாசகான், ஏஏஎல்எல்எப் பொதுச் செயலாளர் சங்கையா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச தலைவர் சலீம், செயலர் முருகபாண்டி, சிஐடியூ தலைவர் செந்தில், பெதுச் செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in