தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
Updated on
1 min read

தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தொழிலாளர் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நல உதவிகள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

எனினும், மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அதனால் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் தமாகா தொழிலாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இப்போராட்டம் நடைபெற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பொருளாதார பரிவர்த்தனைகள் தடைபடும். நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கும். தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in