

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தந்தை, மகன் கொலை வழக்ககின் விசாரணையை அறிக்கையை சிபிஐ, சாத்தான்குளம் போலீஸாரால் ராஜசிங் என்பவர் துன்புறுத்தப்பட்ட வழக்கின் விசாரணையை அறிக்கையை சிபிசிஐடி போலீஸாரும் தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், இரு வழக்குகளிலும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனிடையே சாத்தான்குளம் போலீஸாரால் மார்டின் என்பவர் தாக்கப்பட்டது, தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக சிபிசிஐடி பதிலளிக்கவும், தந்தை, மகன் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு அடுத்த விசாரணையை நவ. 5-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.