கரோனாவுக்கு தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி: கன்னியாகுமரி காவல்துறையில் முதல் இழப்பு

கரோனாவுக்கு தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி: கன்னியாகுமரி காவல்துறையில் முதல் இழப்பு
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவுக்கு தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆயாவாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ்குமார் (49).

இவர், உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் காரோனா தொற்று கண்டறியப்பட்டதன் காரணமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இந்நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இறந்த முதல் காவலர் சுரேஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுரேஷ்குமாரின் சொந்த ஊர் நித்திரைவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம். அவருக்கு மனைவி, மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in