தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை தீவிரமடைவதால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தில் பரவலாக அனைத்து மாவட்டங் களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in