பத்தாம் வகுப்பு துணை தேர்வு: அறிவியல் செய்முறைத் தேர்வு 21-ம் தேதி தொடக்கம்

பத்தாம் வகுப்பு துணை தேர்வு: அறிவியல் செய்முறைத் தேர்வு 21-ம் தேதி தொடக்கம்
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட துணை தேர்வுக்கு விண்ணப்பித் தவர்கள் வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

செப்டம்பர்/அக்டோபர் 2015 க்கான பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் அறிவியல் பாடத்துக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் 21.09.2015 (திங்கட்கிழமை) முதல் 23.09.2015 (புதன்கிழமை) வரை நடத்தப்படும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே அறிவியல் பாட செய் முறைத் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்களும், தேர்வு எழுதாமல் விடுபட்டவர்களும் இந்த தேர்வை எழுதலாம். இத்தேர்வர்கள் கருத் தியல் தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருப்பினும் செய்முறைத் தேர்வு எழுதிய பின்பு கட்டாயமாக மீண்டும் கருத்தியல் தேர்வெழுத வேண்டும்.

நேரடித் தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதிய பின்னரே கருத் தியல் தேர்வை எழுதலாம். எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2016 தேர்வில் அறிவியல் பாட கருத்தியல் தேர் வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் ஜூன் 2015-ல் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு பெயர்களை பதிவு செய்திருக்க வேண்டும். அத்தகைய தேர்வர்கள் செப்டம்பர் / அக்டோ பர் 2015 செய்முறை தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட் டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in