

‘மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றால், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்’ என மதிமுக பொதுச் செயலர் வைகோ எச்சரித்தார்.
காவிரி டெல்டா விவசாயிகள் போதிய தண்ணீர் இன்றி சம்பா சாகுபடி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கர்நாடகாவில் கே.ஆர். சாகர் அணையில் தண் ணீர் இல்லை. ஆனால், கபினி அணையில் போதிய நீர் உள்ளது. அந்த அணையில் இருந்து தமிழ கத்துக்கு 16 டிஎம்சி தண்ணீர் வழங்கலாம்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம், தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட் டோம் என மத்திய சட்ட அமைச் சர் சதானந்த கவுடா கூறியுள் ளார். தமிழகத்துக்கு செய்யும் பச்சை துரோகம் இது. சதானந்த கவுடாவை மத்திய அமைச்சரவை யில் இருந்து பிரதமர் நீக்க வேண் டும்.
கர்நாடகாவிடம் தமிழகம் பிச்சை கேட்கவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கி றோம். இதுவரை காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்கு முறை ஆணை யம் அமைக்கவில்லை. பிரதமரிடம் பலமுறை வேண்டுகோள் வைத் தும் பலனில்லை.
போபாலில் நடைபெற்ற சர்வதேச இந்தி மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, இந்தி உலக மொழி என்று கூறியுள்ளார். இந்தி சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த மொழி. தமிழ் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மொழியாகும். மத்திய அரசு இந்தியை திணிக்கிறது. ஐநா. சபையிலும் இந்தியை கொண்டு செல்ல வேண்டும், இந்தியாவில் அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் இந்தியாவில் ஒருமைப்பாடு நிச்சயமாக இருக்காது.
இந்த மாநாட்டை வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்தியுள்ளது. நேருவின் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இந்திக்கு வட மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றார்.