தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு அபராதம்

தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு அபராதம்
Updated on
1 min read

இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த11 பேர் சேலத்தில் மத பிரசங்கம்செய்ய கடந்த சில மாதங்களுக்குமுன்னர் வந்திருந்தனர். அவர்கள்மற்றும் சென்னையைச் சேர்ந்தஒருவரும் சேலம் கிச்சிப்பாளையம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்றுமத பிரசங்கத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் போலீஸார், இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் மீது தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சேலம் ஜேஎம் எண்:1 நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, தொற்று பரவலுக்கு காரணமான தவறை ஒப்புக்கொள்வதாக 11 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து, 11 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in