Published : 30 Sep 2020 07:49 AM
Last Updated : 30 Sep 2020 07:49 AM

தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணாமல்போன சிலைகளின் விவரங்களை அனுப்ப வேண்டும்: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு

கோயில்களில் காணாமல் போனசிலைகளின் விவரங்களை தொகுத்து அனுப்ப அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44,120 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக சிலைகள், நகைகள் உள்ளிட்டவை உள்ளன.

பழமையான சிலைகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால், கோயில்களில் உள்ள சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு சிலர் விற்பனை செய்து வந்தனர்.

இதுதொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட ஒரு சில சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காணாமல் போன சிலைகளின் முழு விவரங்கள், கடத்தப்பட்ட சிலைகளின் தற்போதைய நிலை, காவல் துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் இந்து சமய அறநிலையத் துறையிடம் இல்லை.

எனவே, 1950-ம் ஆண்டு முதல் காணாமல் போன சிலைகளின் விவரங்களைத் தொகுத்து அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள 1,300 சிலைகளில் 830 கற்சிலைகள் உட்படபல சிலைகள் காணாமல்போயுள்ளதாக சிலைதிருட்டுதடுப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன சிலைகளின் விவரங்களை 1950-ம் ஆண்டில் இருந்து தொகுத்து படிவத்தில் நிரப்பி அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பழமையான சிலைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால், கோயில்களில் உள்ள சிலைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு சிலர் விற்பனை செய்து வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x