

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இன்று நிகழ்ந்த விபத்தில் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
600 மெகாவாட் திறன்கொண்ட என்.எல்.சி. முதல் அனல் மின் நிலையத்தின் 100 மெகாவாட் திறன்கொண்ட 7-வது யூனிட்டில் இந்த விபத்து நேரிட்டது.
கொதிகலனுக்குச் செல்லும் நீராவிக் குழாய் வெடித்ததில், செல்வராஜ் என்ற முதன்மை மேலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அபிஷேக் எனும் பயிற்சி பொறியாளர், கிருஷ்ணமூர்த்தி எனும் செயற்பொறியாளர், சிவலிங்கம் என்ற ஒப்பந்ததாரர், ஜோதி, பாலமுருகன் மற்றும் மதியழகன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த 6 பேரும் என்.எல்.சி மருத்துவமனையிலும், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.