மணல் கடத்தலைத் தடுக்க புதிய விதிகள் வகுக்கப்படுமா?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மணல் கடத்தலைத் தடுக்க புதிய விதிகள் வகுக்கப்படுமா?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

மணல் கடத்தலைத் தடுக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக விதிமுறைகளை அமல்படுத்தப்படுமா? அல்லது மாநிலத்துக்குள் புதிய விதி உருவாக்கப்படுமா? என்பதை தமிழக அரசு தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிகார வரம்பிற்கு உட்பட்ட மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சவுடு மண், உபரி மண் எடுக்க தடை கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர், மணல் கடத்தலை தடுக்க கடந்த 14.09.2020-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, மணல் கடத்தலை தடுக்க மத்திய சுற்று சூழல் மற்றும் வனத்துறை 2017-ல் விதிமுறைகளை வகுத்துள்ளது.

அந்த விதி தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா? அல்லது தமிழக அரசே புதிய விதிகளை உருவாக்கி அமல்படுத்துமா?.

இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in