Last Updated : 29 Sep, 2020 05:35 PM

 

Published : 29 Sep 2020 05:35 PM
Last Updated : 29 Sep 2020 05:35 PM

சேலத்தில் கரோனா தொற்றைப் பரப்பியதாக இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்குத் தலா ரூ.2,000 அபராதம் விதிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

சேலம்

சேலத்தில் கரோனா தொற்று நோயைப் பரப்பியதாக இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று நோய் பரவிய நேரத்தில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் சேலத்தில் மதப் பிரசங்கம் செய்ய வந்திருந்தனர். சேலம் கிச்சிப்பாளையம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தோனேசியர்கள் மதப் பிரசங்கத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற நிலையில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து, கிச்சிப்பாளையம் காவல்துறையினர் இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேர் மீது நோய் தொற்றுப் பரவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சேலம் ஜேஎம் எண்: 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில், இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராகி, நோய் தொற்றுப் பரவவலுக்குக் காரணமான தவறை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து இன்று (செப்.29) நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x