ஜிப்மர் மாணவர் சேர்க்கையில் புதுச்சேரிக்குரிய ஒதுக்கீட்டை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்; திமுக வலியுறுத்தல் 

ஏ.எம்.ஹெச்.நாஜிம்
ஏ.எம்.ஹெச்.நாஜிம்
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு புதுச்சேரி மாநில மாணவர்களுக்குரிய ஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, திமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் இன்று (செப்.29) செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் 54 இடங்கள் நுழைவுத்தேர்வு மூலம் இதுவரை பெறப்பட்டு வந்துள்ளது. நிகழாண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படாமல் அகில இந்திய அளவில் மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி (எம்.சி.சி) மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்துக்குரிய இட ஒதுக்கீடு தடைபடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இது தொடர்பாக ஜிப்மர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, கண்டிப்பாக புதுச்சேரி மாநிலத்துக்குரிய ஒதுக்கீடு தடைபடாது எனக் கூறுகின்றனர். ஆனாலும், ஒதுக்கீடு தடைபடுமா அல்லது எந்த வகையில் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டு முறை குறித்தெல்லாம் புதுச்சேரி முதல்வர், ஜிப்மர் நிர்வாகத்திடம் விரிவாகப் பேசி உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் முதல்வர் இது குறித்து தெளிவான விளக்கத்தை மக்களுக்கு அளித்து சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in