

அடிப்படைவாத அமைப்புகளால்முதல்வர் பழனிசாமிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததைதொடர்ந்து, முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அடிப்படைவாதிகள், அதிருப்தியாளர்கள் மற்றும் தமிழ் ஆதரவாளர்கள் ஆகியோரால் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதைத் தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமிக்கு தற்போது தமிழக காவல்துறையின் கமாண்டோ படையினர் பாதுகாப்பு (சிஐடி செக்யூரிட்டி) வழங்கி வருகின்றனர். மேலும் அவருடைய வீடு, தங்குமிடம், அலுவலகம்ஆகிய இடங்களில் 24 மணி நேரமும்ஆயுதப் படை போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். தற்போதுஉளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய பிரமுகர்களுக்கும் அடிப்படைவாத அமைப்புகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மூத்த தலைவர்கள் இடையே அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை இருப்பதும், முதல்வரின் பாதுகாப்பை அதிகரிக்க காரணம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து முதல்வர் செல்லும் அ்னைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.