

பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், அவர்களின் வருமானம்இரட்டிப்பாக வேண்டும் என்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களையாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். இதற்காக யாருடன் வேண்டுமானாலும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் சந்தையில் போட்டி அதிகமாகி அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிக விலை விவசாயிகளுக்கு கிடைக்கும்.
குஜராத்தில் உள்ள தமிழ்ப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற தமிழ் மாணவர்களின் விருப்பம்தான் அதற்கு காரணம். இந்தி, குஜராத்தி இல்லாததால் மற்ற மாணவர்களும் அங்கு சேருவதில்லை. ஆனாலும், தமிழ்ப்பள்ளி தொடர்ந்து நடைபெற பாஜகஅரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.