Published : 28 Sep 2020 04:25 PM
Last Updated : 28 Sep 2020 04:25 PM

வேளாண் சட்டங்களைக் கண்டித்து கோவில்பட்டியில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைக் கண்டித்து கோவில்பட்டியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், சிறு வணிகர்களைப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களைக் கண்டித்து கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி விலக்கில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், அழகுசுந்தரம், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜூணன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தாலுகா செயலாளர் பாபு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் மூர்த்தி, சுப்பராயலு, திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனைத் திரும்ப வலியுறுத்தியும் கோஷங்கள் முழங்கினர்.

இதே போல் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகர திமுக செயலாளர் கருணாநிதி தலைமையிலும், கழுகுமலையில் விவசாய தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் சுப்பிரமணியன், கயத்தாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமையிலும், கடம்பூரில் நகர திமுக செயலாளர் ராகவன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதே போல், ஓட்டப்பிடாரத்தில் வடக்கு ஒன்றிய இளையராஜா, குறுக்குச்சாலையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், புதியம்புத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, சூரங்குடியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளத்தில் ஒன்றிய பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x