

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் 2-வது தளத்தில் கரோனா வார்டு அமைக்கப் பட்டுள்ள அறையில் உள்ள கான்கிரீட் தூண் ஒன்றின் மேற்பகுதியிலிருந்து நேற்று சிமென்ட் காரை பெயர்ந்து நோயாளி படுக்கையின் மீது விழுந்தது. இதில், அங்கு கரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வந்த காரைக்காலைச் சேர்ந்த 42 வயது ஆண் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி நலவழித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது நோயாளிகளிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் இனியும் காலதாமதமின்றி அரசு பொது மருத்துவமனையை மேம்படுத் தவும், நோயாளிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.