

செங்கல்பட்டில் அதிமுக நிர்வாகி படுகொலை தொடர்பாக 6 பேர் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர்(45). இவர் நேற்று காலையில் ஒத்திவாக்கம் ஊராட்சியில் செல்வி நகரில் தனது நண்பர்சக்கரவர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
செங்கை தாலுகா போலீஸார் சேகரின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். சேகர் சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்ததும், பொன்விளைந்த களத்தூர் ஊராட்சித் தலைவர் விஜயகுமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் சேகர் கொலைதொடர்பாக சுரேஷ், கவுதம், மணிகண்டன், பாபு, மொய்தீன், மகேஷ் ஆகியோர் செங்கை காவல் நிலையத்தில் நேற்றுசரணடைந்தனர். அண்ணன் விஜயகுமாரின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக தம்பிசுரேஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சேகரை கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.