Published : 28 Sep 2020 08:27 AM
Last Updated : 28 Sep 2020 08:27 AM

விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது: ஆய்வுப் படங்கள் இன்று வெளியீடு 

விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் இன்றுடன் (செப்.28) 5 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் முதல் முறையாக விண்வெளி ஆய்வுக்காக தயாரிக்கப்பட்ட ‘அஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப். 28-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு
செய்வதற்கு அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. அதன்படி விண்ணில் தோன்றும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் படம் பிடிக்க ஏதுவாக செயற்கைக்கோளில் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், சாப்ட் எக்ஸ்ரே டெலஸ்கோப் உள்ளிட்ட 5 முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் விண்ணில் ஏவப்பட்டு 5 ஆண்டுகளை அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் தற்போதுநிறைவு செய்துள்ளது. இந்த கால
கட்டத்தில் இந்த செயற்கைக்கோள் அனுப்பிய பல்வேறு படங்கள் முக்கிய அறிவியல் ஆய்வுக்கு வித்திட்டன. அந்தவகையில் சமீபத்
தில் அஸ்ட்ரோசாட் அனுப்பிய படங்கள் மூலம் பூமியில் இருந்து 9.3 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அஸ்ட்ரோசாட் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் இன்று (செப்.28) இணையவழி
யிலான சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இதில் விஞ்ஞானிகள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்று கலந்துரையாட உள்ளனர். மேலும், அஸ்ட்ரோசாட் அனுப்பிய ஆய்வுப் படங்களின் தொகுப்பும் வெளியிடப்பட உள்ளது.

மேலும், அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் ஆய்வுக் காலம் 5 ஆண்டுகள் வரையே திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், செயற்கைக்
கோளின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் அதன் ஆயுட்காலம் மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x