வைகை அணையிலிருந்து மதுரை ஒருபோக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

தண்ணீரை திறந்துவிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ.
தண்ணீரை திறந்துவிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ.
Updated on
1 min read

மதுரை மேலூர் மற்றும் திருமங்கலத்துக்கு ஒருபோக பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பெரியாறு பாசனப் பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயில் ஒருபோக பாசன நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து நேற்று (செப். 26) முதல் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, கள்ளந்திரி கால்வாயிலிருந்து ஒருபோக பாசனத்திற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று (செப். 27) தண்ணீர் திறந்துவிட்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் பெரியாறு பாசனப் பகுதியில் 85 ஆயிரத்து 563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் 19 ஆயிரத்து 439 ஏக்கர் என மொத்தம் 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன வசதி பெறும். 120 நாட்களுக்கு விநாடிக்கு 1,130 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு மற்றும் வடக்கு தாலுக்காக்கள், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர் தாலுக்காவில் பாசனப் பரப்பு மற்றும் கண்மாய்கள் பயன்பெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in