உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த அவகாசம்: பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த அவகாசம்: பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்
Updated on
1 min read

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற் கான காலஅவகாசத்தை குறைந்தபட்சம் ஓராண்டாவது நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதம ருக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது: தேசிய உணவு பாது காப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக பல் வேறு ஆலோசனைகளை தங்களிடம் 3.6.2014 மற்றும் 7.8.2014 அன்று சமர்ப்பிக்கப் பட்ட கோரிக்கை மனுக்கள் வாயிலாக வலியுறுத்தியிருந் தேன். அவை எல்லாம் திருப்தி கரமாக பரிசீலிக்கப்படாத சூழலில் பொது விநியோக திட்டத்துக்கான தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காலஅவகாசம் வழங்குமாறு கோரியிருந்தேன்.

பயனாளிகளை அடை யாளம் காணவும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்திடவும் மத்திய அரசு அனைத்து மாநிலங் களுக்கும் 30.9.2015 வரை காலஅவகாசம் வழங்கியிருக் கிறது. இந்த சட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு எழுப்பியிருந்த பிரச்சினை களை திருப்திகரமாக கருத் தில்கொள்ளாமல் வெகு விரைவாக இச்சட்டத்தை அமல் படுத்துமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் கடந்த 17.9.2015 தேதியிட்ட கடிதத்தில் வலியு றுத்தியுள்ளார்.

மத்திய அரசு நிர்ணயித் துள்ள 17.9.2015 என்ற காலக் கெடு என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, தேசிய உணவு பாது காப்பு சட்டத்தை அமல்படுத்து வதற்கான காலஅவகாசத்தை குறைந்தபட்சம் ஓராண்டாவது நீட்டிக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கான உணவு தானிய ஒதுக்கீடு குறைக்கப் படாமல் தொடர்ந்து தற் போதைய அளவு தொடர வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in