

புதுச்சேரி தலைமைச்செயலகம் எதிரே செயல்படாமல் செயற்கை நீரூற்று காட்சி பொருளாக பல ஆண்டுகளாக கிடக்கிறது.
புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையை பார்க்க உள்ளூர் மக்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கடற்கரையில் முன்பு தூய்மை இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து கடற்கரையிலிருந்த தள்ளுவண்டி கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் கடற்கரை பகுதியை நேரில் ஆய்வு செய்து தூய்மையாக வைத்திருக்க நகராட்சிக்கு உத்தர விட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி கடற்கரைக்கு அழகு சேர்க்கும் நோக்கில் தலைமைச்செயலகம் எதிரே கார்கில் நினைவுச்சின்னம் அருகே சிறிய குன்றுடன் கூடிய செயற்கை நீரூற்று தற்போது கவனிப்பாரற்று கிடக்கிறது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புதுச்சேரியிலுள்ள தலைமைச் செயலர் தொடங்கி செயலர் வரை உயர் அதிகாரிகள் வந்து செல்லும் தலைமைச்செயலகம் எதிரேதான் பல லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. தண்ணீர் கொட்டும் வகையில் அதனை சுற்றிலும் பசுமையான புல்வெளியுடன் பூங்கா இருந்தது.
இது அனைவரையும் கவர்ந் தது. அருவிபோல் தண்ணீர் கொட்டுவதற்கான மோட்டார் கள் பல ஆண்டுகளாக இயங்க வில்லை. தற்போது அதில் வெறும் கற்கள் மட்டுமே இருக்கின்றன. அலங்கார விளக்குகள் இல்லை. கடற்கரை சாலையில் கழிப் பிடம் இல்லாததால் இப்பகுதி கழிப்பிடமாகி விட்டது. சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிடும் அதிகாரிகள் இந்த செயற்கை நீருற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.