திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்? - செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

மதுரையில் அம்மா கிச்சனை பார்வையிட்டபோது, சமையல் பணியில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ. உடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
மதுரையில் அம்மா கிச்சனை பார்வையிட்டபோது, சமையல் பணியில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ. உடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
Updated on
1 min read

மத்திய அரசு வழிகாட்டு நெறி முறைகளை வழங்கிய பிறகே திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் அம்மா பேரவை சார்பில் கரோனா தொற்று உள்ள வர்களுக்கு அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவுக்கூடத்தை கடம்பூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், எஸ்.எஸ்.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தடையின்றி உணவு வழங்கும் வகையில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அம்மா கிச்சன் செயல்படுகிறது. இதன் மூலம் சத்தான உணவு நோயாளிகளுக்கு வழங்குவதால் மதுரையில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் திரைத் துறை தொழி லாளர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 21,000 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படாத அளவில் போதுமான நிதி உதவிகளை வழங்கியுள்ளது.

மத்திய அரசு வழிகாட்டு நெறி முறைகளை வழங்கிய பிறகே மருத் துவக்குழு அறிவுரையின் பேரில் உரிய நேரத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in