

சக்தி குழுமங்களின் தலைவரான ம.மாணிக்கம் முயற்சியால் 2018-ல் புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தயாரிக்கப்பட்ட ‘மிராக்கிள்’ என்னும் ஊட்டச்சத்து பானம், தற்போது கரோனா நோயாளிகள் குணமடைய பலனளிப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சக்தி குழுமம் மற்றும் மிராக்கிள் வெல்னஸ் கிளினிக் தலைவர் ம.மாணிக்கம் கூறியதாவது: `மிராக்கிள்' மருந்து அல்ல. யார் வேண்டுமானாலும் இதை அருந்தலாம்.
புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க 2013 முதல் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவில் உருவாக்கப்பட்டதுதான் ‘மிராக்கிள்’ ஊட்டச்சத்து பானம்.
கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகம் தேவைப்படுவதாக கூறுகின்றனர். மிராக்கிள் பானத்தில் உள்ள லிப்போசமல் வைட்டமின் சி 98 சதவீதம் சிதைவடையாமல் திசுக்களுக்கு சென்றடைவதால், அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இந்த ஊட்டச்சத்து பானம், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ கரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு, நல்ல பலனை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பானத்தில் உள்ள லிப்போசமல் வைட்டமின் ‘சி’ நேரடியாக நமது செல்லில் ஆக்சிஜனாக மாறுவதால், நோயாளிகளுக்கு விரைவில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. கரோனாவால் சுவை மற்றும் வாசனை நுகரும் திறனை இழந்தவர்கள், இந்த ஊட்டச்சத்து பானத்தை அருந்திய 5 நாட்களுக்குள் சுவை, வாசனை நுகர்வு திறனை திரும்பப் பெற்றுள்ளனர். மேலும், 8 அல்லது 9 நாட்களில் குணமடைந்து விடுகின்றனர்.
சிங்கப்பூர், அமெரிக்காவுக்கு மிராக்கிள் ஊட்டச்சத்து பானத்தின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அங்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பானமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.