Published : 27 Sep 2020 07:17 AM
Last Updated : 27 Sep 2020 07:17 AM

கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படும் வீடுகளில் தகரம் அடிப்பது, பேனர் கட்டுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மக்கள்

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பதாலும், பேனர் கட்டுவதாலும் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவியதை அடுத்து பல்வேறு தடுப்பு கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், பொதுப்போக்குவரத்து, நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் திறக்கஅனுமதி என ஊரடங்கில் ஏராளமான தளவுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சில இடங்களில் தொற்று கண்டறியப்படுவர்கள் வீடுகளில் தகரம் கொண்டு அடைப்பதும், தடை செய்யப்பட்ட வீடு என்று பேனர் கட்டுவதும் தொடர்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் பேனர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் கரோனா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தவரின் வீடு தகரம் கொண்டு அடிக்கப்பட்டது. பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் இந்த செயல் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமை ஆணையம் தலையிடும் அளவுக்கு சென்றது.

மாநகராட்சியை கண்டித்து..

இதேபோல், கோவை பீளமேடுபகுதியில் தொற்று இல்லாத நிலையில் தொற்று இருப்பதாகக் கூறிவீட்டில் பேனர் கட்டியதால் வீட்டில்இருந்தவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகதெரிவித்தனர். இதன்தொடர்ச்சியாக நெகட்டிவ் என வந்த தனியார் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகளை அச்சிட்டு கோவைமாநகராட்சியை கண்டித்துவீட்டார் தரப்பில் பேனர் வைக்கப்பட்டது. இதுசமூக ஊடகங்களில் வைரல் ஆனது. இதனால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தகரம் அடிப்பது வீட்டுச் சிறையில் வைப்பதுபோல் உள்ளது. யாருக்காவதுஉடல்நலக் குறைவு ஏற்பட்டால் எப்படி மருத்துவமனைக்குச் செல்லமுடியும். பேனர் கட்டுவதால் அக்கம்பக்கத்தினரின் பார்வையால் பாதிக்கப்படுகிறோம்.

இதுவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வீடுகளில் தகரம் கொண்டு அடைப்பதில்லை. பேனரும் கட்டுவதில்லை. தகரம் அடிப்பதையும், பேனர் கட்டுவதையும் முழுமையாக கைவிட வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x