Published : 27 Sep 2020 07:03 AM
Last Updated : 27 Sep 2020 07:03 AM

அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது: முதல்வர் வேட்பாளர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா?

சென்னை

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான சிக்கல் உருவாகியுள்ள நிலையில், கட்சியின் செயற்குழு நாளைகூடுகிறது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக 2 முறை தொடர்ந்து ஆட்சியில் உள்ள அதிமுக, 3-வதுமுறையும் ஆட்சியை தக்கவைக்கமுயற்சி செய்து வருகிறது. அடுத்தஆண்டு நடக்கவுள்ள தேர்தல்களத்தை வலுவான கூட்டணியுடன் சந்திக்க திட்டமிட்டுள்ளது.

கட்சிக்குள் சிக்கல்கள்

ஆனால், முதல்வர் வேட்பாளர், ஓபிஎஸ் தரப்பினர் வலியுறுத்தும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு மற்றும் சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் கட்சிக்குள் சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

அண்மையில் நடந்த அதிமுகஉயர்நிலைக் குழு கூட்டத்தில்,இந்த விவகாரங்கள் குறித்து நிர்வாகிகள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்துஅன்றிரவே முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி, செப்.28-ம் தேதி செயற்குழு கூட்டத்தை நடத்துவது என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதிமுக செயற்குழு கூட்டம் கட்சித் தலைமைஅலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நாளை (செப்.28) நடக்கிறது. கூட்டத்துக்கு முன்னதாகசிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும். அந்த சிக்கல்களுக்கான தீர்வை செயற்குழு கூட்டத்தில் அறிவித்து அதற்கான ஒப்புதலை பெற வேண்டும் என்பதே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரின் முடிவாக உள்ளது.

இரு தரப்பிலும் கோரிக்கைகள்

ஆனால், முதல்வர் வேட்பாளரை இப்போதே அறிவிக்க வேண்டும் என்பதில் முதல்வர் பழனிசாமி தரப்பும், தேர்தல் முடிந்த பின்னர் பார்க்கலாம் என்பதில் ஓபிஎஸ் தரப்பும் முடிவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்துள்ள வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்ற கருத்தை முதல்வர் தரப்பு ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு துணை முதல்வர் ஓபிஎஸ், அவைத் தலைவர் இ.மதுசூதனனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ஓய்வில் இருக்கும் அவரை ஓபிஎஸ் சந்தித்துள்ளது அதிமுகவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகிகள் கருத்து

இருப்பினும், இவர்களில் ஒரு தரப்பு விட்டுக் கொடுத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதே, அதிமுக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. அதேநேரம், விட்டுக் கொடுத்தால் கட்சியில் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று இருதரப் பும் கருதுகின்றன.

நாளை நடக்கும் செயற்குழு கூட்டத்தில் சிக்கல்களுக்கான தீர்வு ஏற்படுமா என்ற கேள்வியே அதிமுக தொண்டர்களிடம் எழுந் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x