மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் அழைப்பு

மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் அழைப்பு
Updated on
1 min read

எம்.எல்.ஏ.க்கள் உட்பட யார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கினாலும் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், ‘‘தென்காசி தொகுதியில் சூரியசக்தி மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்படுமா?’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ‘‘தனியார் தொழில்முனைவோர் முன்வந்தால் தென்காசியில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு அனுமதி அளிக்கும். காற்றாலை, சூரியசக்தி உட்பட பல்வேறு வழிகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க எம்.எல்.ஏ.க்கள் உட்பட தனியார் தொழில்முனைவோர்கள் யார் முன்வந்தாலும் அரசு அனுமதி அளிக்கும். அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கொள்முதல் செய்ய தயாராக உள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in