ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம்: கட்சி நிர்வாகிகள் அதிருப்தி

ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம்: கட்சி நிர்வாகிகள் அதிருப்தி

Published on

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலி னின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தால் திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி முதல் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ என்ற பெயரில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வரு கிறார். நாகர்கோவிலில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் சட்டப்பேரவை தொகுதி வாரியாக தூத்துக்குடி, மதுரை, தேனி, விருதுநகர் என பயணம் செய்து அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் நிறைவு செய்கிறார்.

ஸ்டாலின் பயண நிகழ்ச்சிகளை தனிக் குழுவே முடிவு செய்வதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சிகள் வழக்கத் துக்கு மாறாக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப் படுகிறது. இந்த தனிக் குழு வினரின் வழிகாட்டுதல்படிதான் ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்ப தால் பல இடங்களில் மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், வர வேற்பு பதாகைகள் வைத்த நிர்வாகிகளை ஸ்டாலின் கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “தேர்த லுக்கு 6 மாதங்களுக்கு முன்பே ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கி யிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சாலையோரக் கடைகளில் டீ குடிப்பது, ஆட்டோக் களில் பயணிப்பது என அவர் மக்க ளோடு மக்களாக பயணிப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இதில் கட்சி நிர்வாகிகளின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக் கிறது. தேர்தல் நேரத்தில் வேலை செய்ய வேண்டிய கட்சியினர் உற்சாகமாக இருக்க வேண்டும்.

தொண்டர்கள் பலத்தில்தான் எப்போதுமே திமுக சாதித்திருக்கிறது. தொண்டர்களை நம்பிதான் தேர்த லிலும் வெற்றிகளை கண்டிருக் கிறது. இதனை கட்சித் தலைமை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in