

வால்பாறை உருளிக்கல் தேயிலைத் தோட்டம் எண் 22-ல் முதிர்ந்த தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு புதிதாக தேயிலை நாற்றுகள் நடும் பணி நடைபெற்றுவருகிறது. பெண் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் தேயிலை நாற்றுக்களை நடவு செய்துகொண்டிருந்தனர். அப்போது சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் செடிகளுக்கு அருகில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை பணியாளர்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்கள் தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த ராஜ நாகத்தை மீட்டு, அடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர்.