தமிழக அரசின் இலவச காப்பீடு திட்டத்தில் 11.35 லட்சம் பேருக்கு ரூ.2,265 கோடியில் சிகிச்சை: சுகாதாரத்துறை தகவல்

தமிழக அரசின் இலவச காப்பீடு திட்டத்தில் 11.35 லட்சம் பேருக்கு ரூ.2,265 கோடியில் சிகிச்சை: சுகாதாரத்துறை தகவல்
Updated on
1 min read

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 11.35 லட்சம் பேருக்கு ரூ.2,265.21 கோடி அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மானி யக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழை, எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் வழங்கும் வகை யில், தமிழக அரசால் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றன,

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத் துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதமும், குறிப்பிட்ட 77 வகை நோய்களுக்கு ரூ.1.5 லட்சம் வீதமும் செலவிட இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 23 முக்கியமான பரிசோத னைகள், 1,016 வகையான சிகிச்சை களுக்கு இதில் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1.57 கோடி காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 157 அரசு மருத்துவமனைகள் மற்றும் 610 தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின்கீழ் 2011-ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரூ.2,265.22 கோடி யில் 11.35 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் மட்டும் 4.59 லட்சம் பேர் ரூ.792.10 கோடி அளவுக்கு காப்பீடு பெற்றுள்ளனர்.

கல்லீரல், சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.1.50 லட்சத்துக்கும் அதிகமாக செல வாகும். இந்த சிகிச்சைகளை மேற் கொள்ளும் மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 கோடியில் தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை வல்லுநர் குழு தீர்மானிக்கிறது. இந்த வகை சிகிச்சைகளால், கடந்த ஆகஸ்ட் வரை 2,602 பேர் பயனடைந்துள்ளனர். தற்போது இந்த தொகுப்பு நிதிக்கு கூடுதலாக ரூ.25 கோடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in