தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தபால்காரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் உள்ள 142 தபால்காரர் பணியிடங்கள், 1 மெயில்கார்டு பணியிடம் ஆகியவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவோர், 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளத்தை பார்க்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in