

சென்னை மாநகரத்தில் 200 இடங்களில் அம்மா வாரச்சந்தை களை விரைவில் தொடங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த சந்தையில் மக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்கப்படும். இதில் சுய உதவிக் குழுக்கள், சிறைக் கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்கப்படும்.
பிரபல தனியார் கம்பெனி களின் பொருட்களும் சந்தையில் விற்கப்படும் என்று கூறப்ப டுகிறது. சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு வாரச் சந்தை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இவை மாநகராட்சியின் சொந்த கட்டிடங்கள் வேறு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளாதபோது அங்கு இயங்கும்.